
Nurturing Hope, Supporting Families Amidst the Pandemic.
COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் பணியில், தேவைப்படும் குடும்பங்களுக்கு உதவிக் கரம் நீட்டுகிறோம். நாங்கள் அத்தியாவசிய பொருட்களை வழங்கினோம் மற்றும் சவாலான காலங்களில் அன்பு கரங்களை நீட்டினோம்.
உலகளாவிய COVID-19 தொற்று நோய்களின் போது, நாங்கள்
இரக்கத்தின் பயணத்தைத் தொடங்கினோம், தனிநபர்கள், சமூகத்தின் மூலம் எதிர்கொள்ளும் எதிர்பாராத சவால்களை புரிந்துக்கொண்டு, ஒற்றுமையுடன் சமூதாய பணி முயற்சிகளுக்கு நம்மை அர்ப்பணித்துள்ளோம். கோவிட் பெருந்தொற்று காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவையும், இணைப்பை வளர்த்துக்கொண்டு, வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆதரவு வழங்குவதை குறிக்கோளாய் வைத்து செயல்ப்பட்டோம்.
கோவிட் தாக்குதலுக்குப் பின் வந்த ஆண்டு, மக்களின் வாழ்வில்
பயங்கரமான நிதி தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே, நாங்கள்
அவர்களின் அவசர தேவைகளை அடையாளம் காண சமூகங்களுடன் நெருக்கமாக பணியாற்றி, கோவிட் காரணமாக கணவனை இழந்த 10 இளம் பெண்களை அடையாளம் கண்டு வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் நோக்கில், அவர்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினோம். ஆட்டோ ஓட்டுனர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை கருத்தில் கொண்டு லாக் டவுன் நாட்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் முடிதிருத்துபவர்கள் சந்தித்த பொருளாதார சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக 150 ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் 50 முடித்திருத்தம் செய்பவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு மளிகை பொருட்களை கொடுத்து ஆதரவளித்தோம். மாற்றுத்திரணாளிகள் 5 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள் கொடுத்து உதவினோம்.












