
We stitch stories of
women empowerment.
இந்தியாவில், பல பெண்கள் தங்கள் குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்துக்கொள்வதற்கும், தங்களைப் பராமரிப்பதற்கும் தங்களை முதன்மையாகக் கருதுகிறார்கள். பெரும்பாலும் பெண்கள் தங்கள் கணவர்களின் பொருளாதாரத்தையே சார்ந்து இருக்கிறார்கள். குடும்பத்திற்கு உணவளிப்பவர் குறிப்பாக, கணவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படும் போது, அந்த குடும்பம் பொருளாதாரத்திற்காக மனைவியையே சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்தின் நிமித்தம் அவர்கள் செலவுகளை நிர்வகிப்பதற்கும் போராடுகிறார்கள். வாழ்வின் எல்லைகளுக்கு தள்ளப்படுகின்றனர்.
அப்படிப்பட்டவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யவும். நம்பிக்கையை விதைக்கவும், காத்திருப்பு அறையில் 8 தையல் இயந்திரங்களை நிறுவியுள்ளோம். ஒரு டயாலிசிஸ் முடிக்க ஒரு நோயாளிக்கு சுமார் 4 மணி நேரம் ஆகும், இந்த நேரத்தை நோயாளிகளுக்கு உதவியாக வரும் பெண்களுக்கு கற்பிப்பதற்கும், அவர்கள் திறமையை மேம்படுத்தவும், பயன்படுத்துகிறோம். அடிப்படை தையல் வகுப்புகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. பயிற்சி முடித்தவுடன் பெண்கள் தையலை ஒரு தொழிலாகத் தொடர்வதில் ஆர்வம் காட்டினால், நாங்கள் அவர்களுக்குப் புதிய தையல் இயந்திரத்தை பரிசளித்து, அவர்களை அரசால் நடத்தப்படும் பெண்கள் மேம்பாட்டு திட்டங்களில் சேர்க்கவும் திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டங்களில் குறிப்பாக சணல் பைகளை தைப்பதிலும். அவர்களின் திறன்களைப் பயன்படுத்தி கொள்வதிலும், அதை அரசாங்காத்தினாலேயே விற்பதிலும் கவனம் செலுத்துகின்றோம், இந்தப் பெண்களின் வாழ்க்கையை திறன் மேம்பாடு மற்றும் பொருளாதார வலுவூட்டல் மூலம் மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
எங்கள் முன்முயற்சி, சார்பு பெண்களுக்கு இலவச தையல் வகுப்புகள் மற்றும் இயந்திரங்களை வழங்கி சுதந்திரம் மற்றும் சுய நிலைத்தன்மையை வளர்க்கிறது.




